என் இயேசுவே உம் தேவ அன்பை
en yesuvae um deva anbai
1. என் இயேசுவே! உம் தேவ-அன்பை நான் என்றும் பாடிடுவேன், ஒப்பற்றதாம் கல்வாரி அன்பை என்றென்றும் பாடிடுவேன்.
பாடிடுவேன். நான் பாடிடுவேன் உம் அன்பை நினைத்தே பாடிடுவேன் பாடிடுவேன் நான் பாடிடுவேன்! என்றென்றும் பாடிடுவேன்!
2. இந்த உலகம் தோற்றம் முன்பே எத்தனை தெரிந்தெடுத்தீர் அந்த மேலான தூய அன்பை என்றென்றும் பாடிடுவேன்!
3. உம் அன்பின் அகலம் ஆழம் நீளம் உயரம் ஈடற்றதே மாசற்ற தூய தேவ அன்பை நான் என்றும் பாடிடுவேன்
4. கானகப் பாதை நான் செல்கையில் காப்பீர் உம் கண்மணி போல் மா பெரிதான உந்தன் அன்பை போற்றியே பாடிடுவேன்
5. என் இயேசுவே! என் அன்பரே! பொன் முகம் காட்டிடவே உன் நேசம் நான் வாஞ்சிக்கிறேன் என்றென்றும் வாஞ்சிக்கிறேன்,
6. விண் மீதிலே நீர் வரும் நாள்! உம்மை நான் சந்திக்கவே விண் மன்னன்! உம் கிருபை எந்தனுக்கிந்திடுமே.