என் இயேசுவே நான் உந்தன்
en yesuvae naan undhan
என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை பாவியானாலும் என்னை ஏற்க்க மறுக்கவில்லை
உம்மை நினைத்து வாழவும் உம்மில் நிலைத்து வாழவும் அருள் புரியுமே அன்பர் இயேசுவே - 2
போதும் அன்பே நீர் போதும் உமது உறவில் நிறைவு வேண்டும் உம்மில் என்றும் நிலைக்கும் வரம் தாரும் - 2
இயேசுவே உம்மை மறக்கும்போது பாவம் என்னை நெறுக்குதே எதிலும் உம்மை நினைக்கும்போது சிலுவை அன்பு நிறைக்குதே உம்மை மறவா உணர்வின் உள்ளம் நாளும் எனக்கு தாருமே உறுதியாய் உம் உறவில் வளர இறுதி வரையும் உதவுமே - 2
தீமை அனைத்தும் அகற்றி விடவே விரும்பவில்லை நெஞ்சமே தினமுமே திரு வார்த்தை கேட்டும் மாற்றம் ஏனோ கொஞ்சமே தூய ஆவி பெலனாய் தந்து நாளும் என்னை நடத்துமே உறுதியாய் உம் உறவில் வளர இறுதி வரையும் உதவுமே - 2