என் இயேசுவே என் ராஜனே
en yesuvae en raajanae
என் இயேசுவே என் ராஜனே உம் நாமத்தை உயர்த்திடுவேன் என் இயேசுவே என் தேவனே உம் நாமத்தை தொழுதிடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஒசன்னா
மன்னாவை தந்து உணவளித்தீர் பெலனோடு நடக்க உதவி செய்தீர் மேகஸ்தம்பமே அக்கினிஸ்தம்பமே கானானை தந்த தெய்வமே
ஆராய்ந்து முடியாத பெரிய காரியம் எண்ணி முடியாத அதிசயமும் என் வாழ்விலே தந்தீரைய்யா உம் நாமம் உயர்த்திடுவேன்
உலகத்தை ஜெயித்த என் இயேசுவே வல்லமையால் என்னை நிரப்பும் உயிருள்ள நாட்களெல்லாம் உம் நாமம் உயர்த்திடுவேன்