என் இயேசுவே என் நம்பிக்கை
en yesuvae en nambikkai
என் இயேசுவே என் நம்பிக்கை எனக்கெல்லாம் நீர் ஐயா உம்மை மறவேனே உருவாக்கினீரே எனக்கெல்லாம் நீர் ஐயா
துன்பம் வந்தாலும் துயரம் சூழ்ந்தாலும் கண்ணீரின் பாதையில் நடந்து சென்றாலும் - உம் வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன் உம் வருகை வரை உம்மைப் பற்றிடுவேன் கண்ணீரின் பாதையில் நடந்தாலும் பயமில்லை
கலங்கித் தவித்தாலும் கைவிடப்பட்டாலும் கவலையால் உள்ளமே உருகிப்போனாலும் - உம் வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன் உம் வருகைவரை உம்மைப் பற்றிடுவேன் கவலையால் உள்ளமே உருகினாலும் கலங்கிடேன்
வியாதி வந்தாலும் பாரம் மிகுந்தாலும் வேதனையால் உள்ளமே உடைந்து போனாலும் - உம் வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன் உம் வருகை வரை உம்மைப் பற்றிடுவேன் வேதனை உள்ளத்தை உடைத்தாலும் அழுதிடேன்