என் இயேசு ராஜா என் மகாராஜா
en yesu raajaa en magaaraajaa
என் இயேசு ராஜா என் மகாராஜா -2 என் வாழ்வில் ஜீவன் தந்தவரே -2
1) காணமல் போன என்னை தேடி வந்தீர் காயங்கள் ஆற்றி என்னை வாழ வைத்தீர் -2 கட்டி அணைத்தீர் எனக்கு முத்தம் கொடுத்தீர் -2 காலம் எல்லாம் உமக்கு அடிமை ஐயா -2
2) பாவி என்று என்னை தள்ளாமலே பாசக்கரம் கொண்டு அணைத்தீரையா -2 தோளில் சுமந்தீர் சிலுவை பாரம் மறந்தீர் -2 பாதம் ஒன்றே எனக்கு போதுமையா (உம்) -2
3) அப்பா என்று அழைத்திடும் உரிமை தந்தீர் அன்பலே என்றும் என்னை சுமந்து சென்றீர் -2 பாசம்தந்தீர் எனக்காய் பரிந்து பேசினீர் -2 ஆயுள் முழுதும் உந்தன் அடிமையா (நான்) -2
ஆராதனை ஆராதனை ஆராதனை -(8)