என் இயேசு நாதா நான் ஒரு பாவி
en yesu naadhaa naan oru paavi
என் இயேசு நாதா நான் ஒரு பாவி என்னையும் மன்னியும் உம் அன்பை பொழியும் என் பாதை புதிதாகட்டும் மனம் உம்மோடு தினம் வாழட்டும்
எனக்காக சிலுவை சுமந்தீரே ஐயா எனக்காக இரத்தம் சிந்தினீரே ஐயா உம்மையே நினைத்து ஜெபத்தில் நிலைத்து வாழ்கின்ற வாழ்வை தர வேண்டும் ஐயா நீர் அன்பான தெய்வம் என் பாதை தீபம் பாவங்கள் நீக்கும் நிலைத் தானே வேண்டும்
நான் செய்த பாவம் என் கண்ணில் ஈரம் யார் மாற்றக் கூடும் உம்மாலே ஆகும் உம்மையே துதித்து உண்மையாய் உழைத்து நான் உந்தன் அன்பை பெற வேண்டும் ஐயா நீர் மெய்யான ஜீவன் எனை மீட்கும் தெய்வம் உம்மோடு வாழும் வரம் தானே வேண்டும்
மெய்யாகவே என் பாடுகள் ஏற்றீர் மெய்யாகவே என் துக்கங்கள் சுமந்தீர் உம்மை நம்பி வந்தேன் ஐயா தள்ளிவிடாமல் அணைத்தீரே ஐயா நீர் உயிருள்ள தேவன் என்னை மீட்கும் தெய்வம உம் ஆவி போதும் நீர் என்னை நடத்தும்