என் இயேசு நாதா
en yesu naadhaa
1. என் இயேசு நாதா ! உம் தியாக அன்பினை இன்னமும் தியானம் செய்கையில் என்னையே பலியாய் சிலுவையில் படைத்தே பணிந்துமே நிதமும் சேவை செய்வேன்
அர்ப்பணித்தேன் என் னையும் இயேசையா! உம் திரு காணிக்கையாய் - முற்றிலும் நற்பணி புரிந்திட திரு சித்தம் செய்திட நற்திரு பாதமே வந்தடைந்தேன்
2. என் இயேசு நாதா ! நீசனும் எனக்காக உன் முழு ஜீவனை இந்திரலோ எம் மகா தியாகத்தின் மேன்மை நினைந்து என் ஜீவ நாளெல்லாம் சேவை செய்வேன் - அர்
3. என் இயேசு நாதா ! பாடுகள் சிந்தையை ஆயுதமாக துதித்திடுவேன் நல்லதோர் போரினை புரிந்திட இகமதில் நின் விசுவாசத்தை தொடர்ந்திடுவேன் - அர்
4. என் இயேசு நாதா ! மரணத்தை ருசித்தீரே என்னையும் மகிமையில் நிறுத்திடவோ ஜீவனை வெறுத்தும் மரணத்தை சுமந்து மே ஜீவனின் பாதையில் தொண்டு செய்வேன் - அர்
5. என் இயேசு நாதா ! தேசத்தை கிழித்துமே ஏழைக்கும் ஜீவனாம் வழி திறந்தான் என்றென்றும் சீயோனில் உம்முடன் நின்றோமே மகிமையின் சேவையை தொடர்ந்திடுவேன் - அர்