என் இயேசு கைவிடமாட்டார்
en yesu kaividamaattaar
என் இயேசு கைவிடமாட்டார் என்னை விட்டு விலக மாட்டார் கவலை இல்லை கண்ணீர் இல்லை வீணான சிந்தனை இல்லை
கரம்பிடித்து நடத்துபவர் நீரல்லவோ பெயர் சொல்லி அழைத்தவர் நீரல்லவோ தாயின் கருவில் உருவாகும் முன்னே தெரிந்து கொண்டதும் நீரல்லவோ
ஆபத்திலே காப்பவர் நீரல்லவோ துணையாய் இருப்பவர் நீரல்லவோ கண்ணின் மணிபோல காப்பவரும் என் தெய்வம் நீரல்லவோ
வார்த்தையினால் பேசுபவர் நீரல்லவோ வழிகாட்டி நடத்துபவர் நீரல்லவோ சோதனையில் தப்பிச் செல்ல வழிகாட்டிடும் என் தெய்வம் நீரல்லவோ