என் இயேசு இராஜா சாரோனின் ரோஜா
en yesu iraajaa saaronin rojaa
என் இயேசு இராஜா சாரோனின் ரோஜா உமைப் பாடவரம் தாருமே
1. காட்டு மரங்களில் கிச்சிலி மரமோ கனிதரும் திராட்சைக் செடி நீர் (2) அழகான செண்டே மருதோன்றிப் பூவே (2) அழகிலே உம் ரூபமே ஆயிரம் பேரில் நீரே
2. அழகான அவர்கை என் தலைகீழே வைத்து அணைப்பினாலே தினம் தேற்றி (2) மலை மேலே துள்ளி மான் போல குதித்து (2) மலர்ந்த உம்முகம் காட்டுமே நேசத்தால் சோகமானேன்
3. கன்மலை வெடிப்பினில் தங்கும் வெண்புறாவே உன் முக ரூபத்தை காண்பி (2) கலைமானின் அழகும் கலையாத தலையும் (2) வெண்மையும் சிவப்புமாமே நேசர் அதோ நிற்கிறார்
4. வாரும் என்நேசரே வாடாத லீலியே வயல் வெளிகளிலெங்கும் போவோம் (2) வாசனை வீசும் தூதாயீம் கனியும் (2) வாசலின் அருகே உண்டே வாஞ்சையைத் தீர்த்திடுமே