என் வெள்ளி நாண் அறுந்து போம்
en velli naan arundhu pom
1. என் வெள்ளி நான் அறுந்து போம் என் பாடல் யாவும் நின்று போம் ஆனால் மேல் வீட்டில் விழித்து ஆனந்தக் கீதம் பாடுவேன்.
பல்லவி
என் ராஜன் முகம் பார்த்துமே என் மீட்பரின் செய்தி கூறுவேன். (2)
2. இவ்வுலகம் அழிந்து போம் அந்நாளை நான் அறிகிலேன். ஆனால் மேலோகில் எனக்கு என் நேசர் வீடு தருவார்.
பல்லவி
என் ராஜன் முகம் பார்த்துமே என் மீட்பரின் செய்தி கூறுவேன். (2)
3. செங்கதிர் வீசும் சூரியன் மேற்பக்கம் சாய்ந்து மறையும் ஆனால் என் மீட்பர் என்னையே தம்மோடணைத்துக் கொள்ளுவார்.
பல்லவி
என் ராஜன் முகம் பார்த்துமே என் மீட்பரின் செய்தி கூறுவேன். (2)
4. என் தீபம் தூண்டி ஏற்றியே நான் ஆவலோடு நிற்பேனே பொன் வீட்டு வாசல் திறக்கும் என் அன்பரோடு வாழுவேன்.
பல்லவி
என் ராஜன் முகம் பார்த்துமே என் மீட்பரின் செய்தி கூறுவேன். (2)