என் வாழ்க்கையில் ஒரு மாற்றம்
en vaazhkkaiyil oru maatram
என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வேண்டும் இயேசுவே நீர் அதைத் தூர வேண்டும்
வேண்டுகிறேன் நான் பணிகிறேன் உம்மையே தொழுகிறேன்
இயலாமை எல்லாம் மாற்றி இமயம்போல் உயர்த்தி விடும் சோர்வுகள் எல்லாம் நீங்கி சுடராய் எரியச் செய்யும்
குறைகள் எல்லாம் நீக்கி குயவனே வனைந்து விடும் பயங்கள் எல்லாம் அகற்றி பரமனே மகிழச்செய்யும்
பெலவீனமெல்லாம் நீக்கி பெலவானாய் உயர்த்திவிடும் தடைகளெல்லாம் அகற்றி தலைவனாய் திகழச்செய்யும்