என் உயிரோடு கலந்தவரே
en uyirodu kalandhavarae
என் உயிரோடு கலந்தவரே என் உடலோடு உறவாட வந்தவரே-2
பல்லவி
என் கண்ணீரைத் தவிர வேறொன்றும் இல்லை ஐயா-2 வேறொன்றும் இல்லை ஐயா-4
மனம் கசந்து நான் அழுதிடுவேன் என் மன்னவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்-2 அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்-2 என் மனதினில் ஆறுதல் அடைந்திடுவேன்-2
உம்மோடு நான் உறவாடனும் உம் முகத்தைப் பார்த்திடனும்-2 என் கண்கள் உறங்கவில்லை-2 உம்மை காணாத என் கண்கள் தூங்கவில்லை-2
உம் பாதத்தில் நான் அமர்ந்திருப்பேன் என் கண்ணீரால் அதைக் கழுவிடுவேன் -2 உம் பாதம் போதும்மைய்யா-2 என் வாழ்வினில் வேறொன்றும் வேண்டாமைய்யா-2
பல்லவி
என் கண்ணீரைத் தவிர வேறொன்றும் இல்லை ஐயா-2 வேறொன்றும் இல்லை ஐயா-4