என் உயிரினும் மேலான
en uyirinum melaana
என் உயிரினும் மேலான இயேசுவே நான் உமக்காக ஊழியம் செய்திடுவேன்
அசையாத மலர்போன்ற உந்தன் முகம் அது என்றும் வாடாது எந்தன் நெஞ்சில் என் நினைவால் உம் நினைவும் வாடியதோ இனி எந்நாளும் மாறாது உம் உறவு
மலை போன்ற கஷ்டங்கள் வந்தாலும் அதை பனி போல இமைப்பொழுதில் மறைந்துவிடும் இதய தேவன் என்னோடு இருப்பதினால் இனி ஒருபோதும் கண்ணீர் நான் விடுவதில்லை
எனக்காக சிலுவையிலே உயிர் கொடுத்தீர் நீர் எனக்காக மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தீர் மரணம் என்னை ஒருபோதும் தொடுவதில்லை இனி என்னாலும் உமக்காக வாழ்ந்திடுவேன்