என் உயிர் இயேசுவே நீரே
en uyir yesuvae neerae
என் உயிர் இயேசுவே நீரே என்னை நித்தமும் நடத்தினீரே நீதியின் பாதையில் என்னை தினமும் அழைத்து சென்றிரே – 2
என் உலகம் நீரே, என் வாழ்வும் நீரே - 2 என் வழியும் நீரே என் துணையும் நீரே - என் உயிர்
1. தாய் தந்தை என்னை கைவிட்டாலும் உற்றார் உறவினர் வெறுத்திட்டாலும் - 2 உயிரின் உயிர் என்று சொன்னவர்கள் உதறி என்னை தள்ளினாலும் - 2 உம கரம் என்னை தாங்கினதே - 2
என் தாயும் நீரே, என் தந்தை நீரே - 2 என் ஆதரவே, என் உயிரும் நீரே - என் உயிர் இயேசுவே நீரே
2. வியாதி படுக்கையில் நான் கிடந்தாலும் பெலனற்று, உடல் சோர்ந்திருந்தாலும் - 2 உலகம் என்னை கைவிட்டாலும் முடிந்ததென்று நாள் குரித்தாலும் - 2 நானே உன் பரிகாரி, என்றுரைத்தீரே - 2
என் சுகமும் நீரே, என் பெலமும் நீரே - 2 என் ஆரோக்கியமே, என் ஔஷதமே - என் உயிர் இயேசுவே நீரே
3. பார்வையிழந்து போன போதும் கால்கள் இழந்து தவித்த போதும் - 2 செவிகள் இரண்டும் அடைந்தபோதும் வாய்கள் ஊமையானபோதும் - 2 ஆவியானவர் நடத்தினீரே - 2
என் கண்கள் நீரே, என் கால்கள் நீரே - 2 என் செவியும் நீரே, என் சொல்லும் நீரே - என் உயிர் இயேசுவே நீரே
4. ஏழையாக பிறந்தபோதும் எளிமையாக வளர்ந்தபோதும் - 2 ஒன்றுமில்லாமல் ஒடுக்கப்பட்டும் பொருட்டில்லாமல் மிதிக்கப்பட்டும் - 2 உம் கரம் என்னை உயர்த்தினதே - 2
என் செல்வம் நீரே, என் சொத்தும் நீரே - 2 எதிர்காலம் நீரே, எனக்கெல்லாம் நீரே - என் உயிர் இயேசுவே நீரே