என் உள்ளம் பொங்கும்ததியின்
en ullam pongumdhadhiyin
என் உள்ளம் பொங்கும்ததியின் சத்தங்கள் என் இயேசு ராஜா புகழைச் சொல்லுமே கர்த்தர் செய்த நன்மைகள் என்னால் மறக்க கூடுமோ நாள்தோறும் நன்றி சொல்லுவேன்
கர்த்தர் வலது கரமே என்றும் நன்மை செய்வாரே பயங்கரங்கள் சூழ்ந்தாலும் பாதுகாப்பாரே கூர்மையான அம்புகள் சத்துரு எய்தானும் கவனமாக பாதுகாத்து என்னை காப்பாரே
கர்த்தர் சொல்ல ஆகுமே - அருள் ஆசி தந்தாரே வெல்லும் வல்லமை அவர் வேத வசனமே சர்வவல்லவர் நிழலில் என்றும் தங்குவேன் - சந்தோஷ கீதங்களை என்றும் பாடுவேன்
ஆத்ம நேசரே உம்மை அண்டிக் கொள்வேனே அன்பு கொண்டுவந்தனை அரவணைப்பாரே நித்திய கன்மலை அவர் நாமம் பாடுவேன் நன்மையினால் என்னை அவர் என்றும் நடத்திடுவார