என் உள்ளம் நன்றியால்
en ullam nandriyaal
1. என் உள்ளம் நன்றியால் நிறைந்து என் தேவனால் நெகிழ்ந்திடுதே மாறிடா அடைக்கலம் நீரே என்றும் என் தஞ்சம் நீரே உம் சிறகதின் நிழலில் மறைத்து என்னைக் காத்த நீரே
நீரே என் கீதமும் பெலமும் நீங்கிட மறைவிடம் நிழலும் இயேசுவே நீர் எந்தன் ஜீவனின் ஊற்றே என்றுமென் புகலிடமே
2. சேய் போல என்னையும் சுமந்தே தாய் போல அரவணை தீரே கானகமாம் இந்த புவியில் கலங்கியே தவித்ததாம் வேளை கண்ணுறங்காதெனையே கருத்துடன் காத்தீரே - நீரே
3. மலை போல் இன்னல்கள் பெருகி அலை போல் சீறி வந்திடினும் அளவில்லா கிருபைகள் பகிர்ந்து அசைந்திடாதெனையுமே ஸ்திரமாய் அண்ணலே நிலைநிறுத்தி அற்புத ஜெயமீந்தீரே - நீரே
4. குருவே நீர் என்னையும் அழைத்தார் திரு சித்தம் செய்யவே இகத்தில் களி மண்ணைப் போல உம் கரத்தில் கர்த்தரே கையளித்திடுவேன் உருவாக்கிடும் எனை உந்தன் திரு சாயலாய்- நீரே
5. எக்காளம் தொனி திடும் நேரம் இக்காலப் பாடுகள் தீரும் ஏகிடுவேன் உந்தன் சமூகம் தாண்டிடுவேன் உந்தன் வதனம் ஏங்கிடுதே உள்ளமே ஆனந்த நாளிதுவே- நீரே