என் உள்ளம் தேவன்பால்
en ullam devanbaal
என் உள்ளம் தேவன்பால் பொங்கி வழியுதே என்றென்றும் உம்மை நான் பாடிடுவேன்
பேரகத்தில் நீர் எனக்கு சீரமைப்பை செய்து வைத்தீர் எந்நாளுமே எப்போதுமே நன்றியுடன் வாழவைத்தீர்
தாயினும் மேலாய் அன்புவைத்தே நோய் பிணியாவையும் நீக்கி விட்டீர் சேயைப் போல அரவணைத்தீர் ஷேமத்தோடே வாழவைத்தீர்
மேலோகத்தில் ஏழை எனக்காய் மேன்மையான வீட்டைச் செய்தீர் பூலோகத்திலும் வீட்டைத் தந்தீர் உத்தமமாய் வாழவைத்தீர்
வானத்திலே தேவன் தோன்றிடும் வேளை ஆயத்தமாய் நான் வந்திடவே ஆவியினாலும் வசனத்தினாலும் காத்திடும் எந்தன் ஆத்துமாவை