என் தேசத்தின் அருவருப்பை
en thesathin aruvaruppai
என் தேசத்தின் அருவருப்பை மாற்றும் தெய்வமே என் தேசத்திற்காய் கதறுகிற கூட்டம் நாங்களே - 2
துதிக்கிறோம் தெய்வமே உமது பாதத்தில் ஜெபிக்கிறோம் நித்தமும் உமது சமூகத்தில் - 2
1. தேசத்தின் அழிவைக் கண்டு நின்றுவிடாமல் திறப்பில் நின்று அழ ஆபிரகாம் வேண்டுமே -2 வனாந்திரம் பார்த்தவுடன் சோர்ந்துவிடாமல் -2 ஜனங்களை நடத்துகின்ற மோசேக்கள் வேண்டுமே -2
2. எரிகோ கோட்டைகள் எதிர்த்து நின்றாலும் இடித்து நொறுக்கி விட யோசுவாக்கள் வேண்டுமே -2 யோர்தான்கள் அலை திரண்டு புரண்டு வந்தாலும் - 2 பிளந்து வழி எடுக்க எலிசாக்கள் வேண்டுமே -2
3. பாழாய் போனதாய் கிடக்கும் கிராமங்கள் பயிர் நிலமாய் மாற்ற தெபோராக்கள் வேண்டுமே -2 தேசத்தை அழிக்க பல திட்டங்கள் வந்தாலும் - 2 ராஜாவின் பாதத்தில் ஜெபிக்க எஸ்தர்கள் வேண்டுமே-2