என் தேசம் அழிவதற்கு
en thesam azhivadharku
என் தேசம் அழிவதற்கு நான்தானே காரணம் என் ஜனம்மடிவதற்கும் நான்தானே காரணம்
நான் ஜெபிக்காததால் தேசம் அழிகின்றதே திறப்பில் நிற்காததால் என் ஜனம் மடிகின்றதே
என சூழ்நிலையைப் பார்த்து நான் ஜெபிக்க மறந்ததால் - சுனாமி தேசத்தையே வாரிக் கொண்டதே
என் சுயநலத்தைப் பார்த்து நான் ஜெபிக்க மறந்ததால் - சூறாவளி தேசத்தையே புரட்டிப் போட்டதே
என் சுகத்தை மட்டும் பார்த்து நான் தூங்கி கழித்ததால் - பூகம்பம் தேசத்தையே சிதைத்துப் போட்டதே
தேவ பாரம் அறியாமல் நான் அலைந்ததால் - தேசத்தில் பாவங்கள் பெருகிப் போனதே