ஏன் தேடுகிறீர்கள்
en thedugireergal
ஏன்! தேடுகிறீர்கள் தேடுகிறீர்கள் ஜீவ தேவனை - வைத்த கல்லறையிலே
1. உன்னதனின் மன்னவனாம் முன்னதாகவே சொன்னாரே மூன்றாம் நாளில் உயிர்ப்பதாகவே - தாமும் ஜெயிப்பதாகவே - ஏனோ!
2. பூதலத்தில் யாவும் படைத்த தேவன் பூமியும் தாங்குமோ தான் சிருஷ்டி கர்த்தரை - மகா வல்ல தேவனை - ஏனோ!
3. தீர்க்கருரை செய்திருந்த நீதிச் சூரியனாம் வீரனாக எழுந்தார் காத்தோர் நானவே - காவல் செய்தோர் நாணவே - ஏனோ!
4. நம்பிக்கையே நமக்கு பார்தலத்திலே நாம் எழும்புவோம் அவ்வண்ணல் போலவே - இயேசு ராஜன் போலவே - ஏனோ!
5. சேனையின் தலைவன் உன்னத ராஜனும் ஆனார் வெற்றியால் சபைக்குச் சிரசும் - நம்மை விண்ணில் சேர்ப்போரும் - ஏனோ!
6. ரூபித்தனரே நமக்குத் தேவ சுதனென்றும் தூய்மையின் ஆவியாலே வென்றதினாலும் - சாவை ஜெயித்ததினாலும் - ஏனோ!
7. ஸ்தோத்திரம் துதி என்றும் எம் இயேசு நாதனுக்கு பாத்திரமற்ற நமக்கீந்தார் ஜீவனும் - ஜடம் சாவாமை தன்னும் - ஏனோ!