என் தணியாத தாகமானீர்
en thaniyaadha thaagamaaneer
பல்லவி
என் தணியாத தாகமானீர் உலகம் தணித்திடுமோ என் அணையாத விளக்கு நீரே அணையாமல் எரிந்திடுவேன்.
என் நினைவே என் இயேசுவே மனம் எங்கும் நிறைந்த உறவே
1. உம்மை பிரியாத கொடியாக உம்மிலே நிலைத்திருப்பேன் என் குறைகளெல்லாம் சுத்தம் செய்ய கனி தந்து வளர்ந்திடுவேன். நீர் என்னில் நிலைத்திருக்க எதுவும் என்னை பிரிப்பதில்லை.
பல்லவி
என் தணியாத தாகமானீர் உலகம் தணித்திடுமோ என் அணையாத விளக்கு நீரே அணையாமல் எரிந்திடுவேன்.
2. இவ்வுலக போராட்டங்கள் உம் அன்பை தனிப்பதில்லை எந்நேரமும் ஸ்தோத்தரிப்பேன் உம்மாலே மேற்க்கொள்ளுவேன். நீர் என்னோடிருக்கும் வரை எதுவும் என்னை அசைப்பதில்லை.
பல்லவி
என் தணியாத தாகமானீர் உலகம் தணித்திடுமோ என் அணையாத விளக்கு நீரே அணையாமல் எரிந்திடுவேன்.