என் தலைவா என்னை ஏன் அழைத்தாய்
en thalaivaa ennai en azhaithaay
என் தலைவா என்னை ஏன் அழைத்தாய் பின்னே வாவொன்று ஏன் மொழிந்தாய் தகுதியில்லா ஏழைக்கிந்த தகுதியை ஏன் அளித்தாய் என்
தனியே நான் நின்ற வேளை நல்ல இசைபோல் மனம் புகுந்தாய் பயந்தேன் நான் மிக வியந்தேன் - நீயென்னை அணைத்தாய் நெஞ்சம் ஒன்றாய் இணைத்துக் கொண்டாய் வாழும் காலம் யாவும் உன்னோடு உலகில் வாழப்பணித்தாய் என்ன நீ என்னில் கண்டாய் - என்
2 . பாதத்தில் நான் அமர்ந்திருந்தேன் இது போதும் என்றிருந்தேன் எழுந்தாய் நீமெல்லக் குனிந்தாய் - ஏழைகள் பாதம் கழுவியே பாடம் சொன்னாய் எளிய மனிதர் துணையாய் எந்நாளும் உலகில் வாழப் பணித்தாய் என்ன நீ என்னில் கண்டாய் - என