என் தகப்பன் என் நன்மைக்கே
en thagappan en nanmaikke
என் தகப்பன் என் நன்மைக்கே எல்லாம் செய்வார் என் தகுதிகள் பார்க்காமல் உதவி செய்வார் தப்பிதங்கள் பாராமல் தகுதிகள் பாராமல் எனக்காய் யாவையும் செய்து முடித்தார்
என் தகப்பனை உயர்த்தியே ஆராதிப்பேன் இயேசு ராஜனை உயர்த்தியே ஆராதிப்பேன் நம் தகப்பனை உயர்த்தியே ஆராதிப்போம் இயேசு ராஜனை உயர்த்தியே ஆராதிப்போம்
1. என் முன்னே சென்று எதிரியை அழிப்பவர் உமக்கே ஆராதனை எனக்காக எல்லா யுத்தங்களைச் செய்பவர் உமக்கே ஆராதனை நன்மைகள் பாராமல் குற்றங்குறை பாராமல் எனக்காய் யாவையும் செய்து முடித்தார்
2. வறண்ட நிலங்களை வயல்வெளியாய் மாற்றிடுவீர் உமக்கே ஆராதனை அவாந்தர வெளிகளை நீரூற்றாய் மாற்றிடுவீர் உமக்கே ஆராதனை நன்மைகள் பாராமல் குற்றங்குறை பாராமல் எனக்காய் யாவையும் செய்து முடித்தார்
3. உயர்ந்த மேடுகளை சமவெளியாய் மாற்றிடுவீர் உமக்கே ஆராதனை உலர்ந்த எலும்புகளை உயிரோடு எழுப்பிடுவீர் உமக்கே ஆராதனை சூழ்நிலைகள் பாராமல் சூழும் ஜனம் பாராமல் எனக்காய் யாவையும் செய்து முடித்தார்