என் சிருஷ்டிகரே என்
en sirushtigarae en
என் சிருஷ்டிகரே என் நாயகரே என்னையும் இரத்தத்தினால் கழுவி கன்மலையும் உம்மேல் என்னை நிறுத்தி கலங்கிடான் விசுவாசம் தந்தீர்
இயேசு மணாளா எப்போ வருவீர் ஏழை என் ஆவலை தீர்த்திடவே தேசு நிறைந்த உம் பொன் முகம் கண்டிட மாசில்லா தானாக வாஞ்சிக்கிறேன்
பாவத்தில் மூழ்கி மாள்கையிலே தேவாவியா லென்னில் ஜீவனீந்தர் மேவி உயிர்ப்பித்து என்னையும் உம்மோடு சேர்த்தீரே உன்னத ஸ்தானத்திலே - இயேசு
மண்ணின் சரீரம் மாறிடவே விண் சாயலை அது பெற்றிட வே தப்பில்லாத நல் உபதேச மந்திர அப்போஸ்தலரை அனுக்கிரகித்தீர் - இயேசு
முன்னோர்கள் கண்டிடா பொக்கிஷம் கண்டேன் கிருபையை உம்மில் நான் அண்ணலாம் இயேசுவே சொல்லொண்ணா பாடுகள் நண்ணினும் அழியாது காத்தீர் - இயேசு
அளவில்லா ஐசுவரியத்தை நிறைவே விலையேறப் பெற்ற நற்பொக்கிஷமே அழிவற்றோனாய் உன் முகம் காணும் வேளையில் ஆனந்தத்தால் மகிழ்ந்தார்ப்பரிப்பேன் - இயேசு