என் சமூகம் உன் முன் சென்றிடும்
en samoogam un mun sendridum
என் சமூகம் உன் முன் சென்றிடும் இளைப்பாறுதல் நான் தந்திடுவேன் கலங்கிடாதே பயப்படாதே கரம் பிடித்து உன்னை நடத்திடுவார்
1. செங்கடல் உனக்காய் வழி திறக்கும் சாத்தானின் சேனைகள் அழிந்து போகும் யோர்தான் நதியும் விலகி ஓடும் ஜீவ, வாசல் உன்னை வரவேற்கும்
2. வாதை உன் கூடாரத்தை அனுகாது வழிகளெல்லாம் தூதர் காத்திடுவார் பாதங்கள் கல்லில் இடறிடாது தூதர்கள் கைகளில் ஏந்தி செல்வார்
3. மாராவும் உனக்காய் மதுரமாகும் எரிகோ கோட்டையும் இடிந்து விழும் சூரியன் சந்திரன் தரித்து நிற்கும் ஜீவ ஒளி உன்னை நடத்தி செல்லும்
4. பகைவர்கள் நல்லோராய் மாறிடுவார் வெறுத்தோர் உன்னை வரவேற்பார் கோணலான எல்லாம் செவ்வையாகும் மகிழ்வுடன் என்றும் வாழ்ந்திருப்பர்