என் சகோதரா எங்கு செல்கின்றாய்
en sagodharaa engu selgindraay
என் சகோதரா எங்கு செல்கின்றாய் இன்று நீ ஓர் நற்செய்யை கேட்டுச் செல்வாயோ
கஷ்டமான வாழ்க்கை உளதோ கவலைகளும் தோல்விகளும் உண்டா காத்திருக்கிறார் ( உன் ) இயேசு ராஜனே கல்வாரியின் அன்பினாலே ஜெயம் தருவார்
பஞ்சங்களும் , பிரச்சனைகளும் பூமியின் மேல் கண்ணியாய் வருமே அன்பு தணியும் ( மனிதர் ) ஆறுதல் போகும் அளித்திடுவார் உந்தனுக்கோ நித்ய சந்தோஷம்
தீய மாந்தர் எதிர்த்திடுவார் தீமை சக்திகளும் அலைக்கழிக்கும் தடு மாறாதே ( உண்மை ) தேவனைத் தேடு தூய வாழ்வைத் தந்திடுவார் இயேசுவை நாடு
பாவ சேற்றின் தாழ்விடங்களில் வா தூரமாய் கிடக்கும் உன்னை மீட்க அழைக்கின்றாரே ( உந்தன் ) அன்பின் தேவனே இரட்சிப்பின் சந்தோஷத்தை நீ பெற்று செல்வாயே