என் பிரியமே என் ரூபவதி
en piriyamae en roobavadhi
என் பிரியமே என் ரூபவதி என்ன வேணும் சொல்லு இயேசு மணவாளனின் இன்ப மார்பு போதுமே அதில் சாய்ந்துரவாடும் வாழ்வு வேண்டுமே
முள்ளுகளுக்குள் லீலீ புஷ்பமும் நீதான் ஸ்திரிகளுக்குள்ளே பிரியமானவளும் நீதான் - 2 என் நாமத்துக்காக நொருக்கப்பட்டவளும் நீதான் உன்னை என் மணவாளியாய் ஏற்றுக்கொண்டேனே
பள்ளத்தாக்கின் லீலீ புஷ்பம் இயேசுவே குமாரருக்குள் பிரியமானவரும் இயேசுவே - 2 என் பாவத்துக்காக நொருக்கப்பட்டவரும் இயேசுவே
ஆத்தும நேசரை தேடி அலைந்தவள் நீதான் விடாது அவரை பற்றிக்கொண்டவளும் நீதான் - 2 அவர் இருதயத்தை கவர்ந்து கொண்டவளும் நீதான் உன்னை அவர் மணவாளியாய் ஏற்றுக்கொண்டாரே
வெள்ளங்கனியா நேசம் கொண்டவரும் இயேசுவே வலக்கரதால் என்னை அணைத்துக்கொண்டவரும் இயேசுவே - 2 முத்திரையாய் என்னை பதித்துக்கொண்டவரும் இயேசுவே உம்மை என் மணவாளனாய் ஏற்றுக்கொண்டேனே