என் பிதாவின் லோகம் என் காதுகள்
en pidhaavin logam en kaadhugal
1. என் பிதாவின் லோகம் என் காதுகள் கேட்க இம்மண்டலத்தின் இசைகள் தொனிக்குதே தெளிவாய்.
பல்லவி
என் பிதாவின் லோகம் மலை விருட்சங்கள் அவர் சிருஷ்டித்தாரென நான் ஆறுதல் கொள்வேன்.
2. என் பிதாவின் லோகில் காலைப்பொழுதினில் பறவைகளின் பாடல்கள் பறை சாற்றுகின்றதே.
பல்லவி
என் பிதாவின் லோகம் மலை விருட்சங்கள் அவர் சிருஷ்டித்தாரென நான் ஆறுதல் கொள்வேன்.
3. என் பிதாவின் லோகம் நான் என்றும் மறவேன் மோசம் நேரிட்ட போதிலும் அவரே என் கர்த்தர்.
பல்லவி
என் பிதாவின் லோகம் மலை விருட்சங்கள் அவர் சிருஷ்டித்தாரென நான் ஆறுதல் கொள்வேன்.