என் பெலனே என்னை
en pelanae ennai
என் பெலனே என்னை அழைத்தவரே தடுமாறும் வேளையில் தாங்கினீரே என் இயேசுவே என்னை அழைத்தவரே தடுமாறும் வேளையில் தாங்கினீரே
1.கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன் உயரங்களில் என்னை எழும்ப செய்தீர்-2 உம் பெலன் தான் இதுவரையிலும் தாங்கியது உம் பெலன் தான் இதுவரையிலும் நடத்தியது-2
2.உபயோகமில்லாத பாத்திரம் நான் ஒன்றுக்கும் உதவாத பைத்தியம் நான்-2 ஏனோ என்னையும் கருவிலே உம் கண்கள் கண்டது உமக்காய் எழும்ப உம் வலக்கரம் என்னை வணைந்தது-2
3.சத்ருக்கள் என்னை நெருங்கினாலும் என் மேல் யுத்தம் செய்ய எழும்பினாலும்-2 என் ஜீவனின் பெலனானவர் இருப்பதினால் என் வாழ்வில் யாருக்கு நான் அஞ்சிடுவேன்-2