என் பெலனாகிய கர்த்தாவே
en pelanaagiya karthaavae
என் பெலனாகிய கர்த்தாவே உம்மை நான் நேசிக்கிறேன் எந்தன் நெருக்கத்திலே என் சத்தத்தை நீர் கேட்டு பதிலளித்தீர்
என் கன்மலையும் என் கோட்டையும் என் இரட்சகரும் என் தேவனும் நீர் நான் நம்பிடும் என் துருகமே எந்தன் இரட்சண்ய கொம்பு நீரே
சிறுமைப்படும் மனிதனே கலங்கிடாதே சீக்கிரம் நம் இயேசு வந்துடுவார் மேட்டிமை மனிதனுக்கு நீ பயந்திடாதே மேசியா என்றும் துணையானதால்
இரட்சிப்பின் கேடகம் எனக்குத் தந்தார் நீதி என்னும் சால்வையை எடுத்துவைத்தார் கர்த்தர் பெலத்தால் மதிலை தாண்டுவேன் அவர் வலக்கரம் என்னைத் தாங்கிடும்