என் பரம பிதா செல்வந்தராம்
en parama pidhaa selvandharaam
1. என் பரம பிதா செல்வந்தராம் பூலோக வஸ்துக்கள் அவர்க்குச் சொந்தம். வெள்ளி பொன் முத்து ரத்தின கல்லும் நந்தவனமும் என்னுடைய பங்கே.
பல்லவி
நானோர் ராஜபுத்ரன் ஓர் ராஜபுத்ரன் நேச யேசுவுடனே நானோர் ராஜபுத்ரன்.
2. தேவ சுதன் யேசு ரட்சகராம் பரதேசி போல் திரிந்து மரித்தார் இப்போ மோட்சத்தில் பொற்க்ரீடாதிபர் இரண்டாம் வருகையில் மோட்சம் தருவார்.
பல்லவி
நானோர் ராஜபுத்ரன் ஓர் ராஜபுத்ரன் நேச யேசுவுடனே நானோர் ராஜபுத்ரன்.
3. நானோ துஷ்டப் பிள்ளையாய்த் திரிந்தேனே சத்ருவாய்ப் பிறந்து பாவியாய் வாழ்ந்தேன் தேவ மக்களில் இப்போ நான் ஓர் ஆள் பரலோகத்தின் பங்கையும் அடைந்தேன்.
பல்லவி
நானோர் ராஜபுத்ரன் ஓர் ராஜபுத்ரன் நேச யேசுவுடனே நானோர் ராஜபுத்ரன்.