என் பாவம் சாபம் நோவும் யாவுமே
en paavam saabam novum yaavumae
1. என் பாவம் சாபம் நோவும் யாவுமே யேசுவிடம் வைத்தேன் முன்னமே சிலுவையில் தொங்கி பாவி! பார்! உனக்காய் இப்பாடென்றுரைத்தார் நீங்கிற்றே என் பாவப் பாரமே உடனே! (2).
2. நான் யேசுவிடம் யாவும் வைக்கிறேன் மோசம் துன்பம் நேர்ந்தால் நோக்குவேன் நெஞ்சின் நோவை மாற்ற அறிவார் கண்ணீர் சொரிந்தாலும் துடைப்பார் வல்லவரில் சாய்ந்தால் ஜெயிப்பேன் தேறுவேன்! (2).
3. எந்நாளும் மீட்பர் பேரில் சாருவேன் என்ன நேரிட்டாலும் நம்புவேன் அன்பின் மார்பில் சாய்ந்தும் இன்பமாய் சமாதானம் பெற்றும் பூர்த்தியாய் மீட்பரோடு தங்கல் இன்பமே மோட்சம்! (2)
4. யேசுவிடம் யாவும் வைத்து வை ஒன்றும் மறைக்காமல் சொல்லி வை லோகம் யாவும் கையில் ஏந்துவார் ஜீவன் சாவு யாவும் ஆள்பவர் உன்மேல் வாஞ்சையாக நிற்கிறார் வந்துபார்(2).