என் பாத்திரம் முடியும்வரை
en paathiram mudiyumvarai
என் பாத்திரம் முடியும்வரை உம் கைகளில் நானிருக்க யெகோவாயீரே வனைந்தவரே உலகத்தில் தள்ளாதிரும்
விக்கினங்கள் கடக்கும்வரை வல்ல உம் செட்டைகளின்கீழ் நல்ல நிழல் நான் தங்குவேன் நாதா தயை கூருமே
ஆண்டாண்டு காலங்கள் அருள் கூர்ந்தீரே அன்பரே ஊழியத்தில் ஆலோசனை தந்தவரே யாரிடம் இனி செல்லுவேன்
சோதனைகள் சூழ்ந்த நேரம் சத்துருவை வெல்ல செய்தீர் பாத்திரனாய் மாற்றிக் கொள்வீர் பரன் இயேசு பாதம் சேர்ந்தேன்