என் ஓட்டத்தை ஜெயமுடன்
en ottathai jeyamudan
என் ஓட்டத்தை ஜெயமுடன் ஓடி அந்த தேசத்தை சுதந்தரிப்பேன்
கர்த்தர் என் பட்சத்தில் என்றென்றும் இருப்பார் ஜெயமுடன் ஓட்டத்தை முடிக்கச்செய்வார்
(2கொரி 4:9) 1. நான் துன்பத்தின் ஊடாய் நடந்தாலும் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை கீழே தள்ளப்பட்டு விழுந்தாலும் 2 நான் உடைந்துப் போவதில்லை - கர்த்தர் என்
(யோவா 12:24, மல் 3:2,3) 2. கோதுமை மணியாய் விழுந்து நான் மடிந்து மிகுந்த பலன் கொடுப்பேன் அக்கினியால் என்னை புடம் இட்டாலும் விசுவாசத்தோடு நான் முன் செல்லுவேன் - கர்த்தர் என்
(2தீமோ 4:7, வெளி 2:10) 3. நல்லதோர் போராட்டம் போராடுவேன் விசுவாசத்தை என்னில் காத்துக் கொள்வேன் அந்நாளில் நியாயாதிபதியிடம் ஜீவகிரீடத்தை நான் பெற்றுக் கொள்வேன் - கர்த்தர் என்