என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே
en nesar yesuvin mel saarndhae
என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே துன்ப வனாந்தரத்தில் நடந்திட இன்ப நல் வாழ்வடைந்தேன்
லீலி புஷ்பம் சரோனின் ரோஜா பாலிலும் வெண்மை தூய பிதா பூரண ரூப சௌந்தர்யமே பேர் சிறந்த இறைவா
கன்னியர்கள் நேசிக்கும் தேவா கர்த்தரின் நாமம் பரிமளமே இயேசுவின் பின்னே ஓடி வந்தோம் என்னையும் இழத்துக் கொண்டார்
நேசக்கொடி மேல் பறந்தோங்க நேசர் பிரசன்னம் வந்திறங்க கிச்சலி மரத்தின் கீழ் அடைந்தேன் கர்த்தரின் ஆறுதலே
தென்றலே வா வாடையே எழும்பு தூதாயீம் நற்கனி தூயருக்கே வேலி அடைத்த தோட்டமிதே வந்திங்கு உலாவுகின்றார்
நாட்டினிலே பூங்கனி காலம் காட்டுப்புறாவின் பாட்டொலிக்கும் கன்மலை சிகரம் என் மறைவே இந்நேரமே அழைத்தார்
நித்திரையே செய்திடும் ராவில் நித்தம் என் ஆத்மா நல் விழிப்பே என் கதவருகே நின்றழைத்த இயேசுவை நேசிக்கிறேன்
நேசத் தழல் இயேசுவின் அன்பே நேசம் மரணம் போல் வலிதே வெள்ளங்கள் திரண்ட தண்ணீர்களால் உள்ளம் அணைந்திடாதே
தூய ஸ்தம்பம் போலவே எழும்பி தேவ குமாரன் வந்திடுவார் அம்மினதாபின் இரதம் போல அன்று பறந்து செல்வேன்
More from Pazhaya Paadalgal
- அநாதி தேவன் உன் அடைக்கலமேanaadhi devan un adaikkalamaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேandho kalvaariyil arumai iratsagaraeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோazhaikkiraar azhaikkiraar idhoSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைத்தீரே இயேசுவேazhaitheerae yesuvaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்aanandhamaay inbak kaanaan egiduvenSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் நாமே ஆர்ப்பிரிபோமேaanandhamaay naamae aarppiribomaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தம் பேரானந்தம்aanandham peraanandhamSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆயிரம் வருட அரசாட்சியேaayiram varuda arasaatsiyaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal