என் நேசர் தேடி வந்தார்
en nesar thedi vandhaar
என் நேசர் தேடி வந்தார் எந்தனது கண்ணீர் கண் டார் ஏழை என்னோடு கூடவே இருந்தாரே!
1 சேனையின் கர்த்தர் பராக்கிரமசாலி யவர் “சும்மாயிரு உனக்காய் யுத்தம் செய்வேன்” என்றார் எனக்காய் யுத்தம் செய்து ஜெயமதை வாங்கித் தந்தார் வாழ்நாளெல்லாம் அவரைப் போற்றி பாடுவேன்-என் நேசர்
2. மனித சாயமெல்லாம் விருதாவாய் போய்விடும் தாயுள்ளம் கொண்ட அன்பர் ஆற்றிய அணைத்திட்டாரே அன்பின் அடிகளாலும் ஆறுதல் மொழிகளாலும் இன்னும் அவர் கிட்டி சேர உதவினார் - என் நேசர்
3. மரணத்தின் கன்னி என்னைச் சுற்றி சூழ்ந்திடும் போதும் மரணத்தின் பெலன் அளித்து புதிய ஜீவன் ஈந்தார் அக்கினி சோதனைகள் அலையென மோதிடினும் விசுவாச பாதையில் வெந்திடா காத்தீரன்றோ - என் நேசர்
4. கர்த்தரை என் முன்பாக நிறுத்தி நோக்குவதினால் அசைக்கப்படுவதில்லை மனுஷன் எனக்கென் செய்வான் வானத்தைக் கிழித்திறங்கி சத்துருவை முறியடித்த இராஜாதி ராஜன் ஜெயமே எந்தன் ஜெயமே! - என் நேசர்
5. பிதாவே உம் இஷ்டம் மாத்திரம் என்னில் நிறைவேறட்டும்” என்றுரைத்த இயேசுவைப்போல் என்னை முற்றும் ஒப்புவித்தேன் என்னிலே நற்கிரியை ஆரம்பித்ததும் என் இயேசு முடிவு வரை நடத்தி மகிமையில் ஏற்றுக் கொள்வேன் - என் நேசர்