என் நெஞ்சமே நீ
en nenjamae nee
என் நெஞ்சமே நீ இயேசுவிடம் போ உன் குறைகளை சொல்லி ஓர் உறைவிடம் கேள்
தாயென காத்து இரட்சிக்கும் இயேசு தன்னிகரில்லா வல்லவரே தடுத்தாட் கொள்வார் நெஞ்சமே நீ அஞ்சிட வேண்டாம் அவர் பாதம் போதும்
வழி ஒன்று காட்டும் ஒளியன்றோ இயேசு உயிரும் நான் உயிர்ப்பும் என்றாரே அஞ்சிட வேண்டாம் நெஞ்சமே அவர் அருள் ஒன்றே போதும் வேறொன்றும் வேண்டாம்
என்னிடம் வா என்று அழைத்து உன் துன்பங்கள் சுமைகள் ஏற்றாரே சிலுவையில் சுமந்து தீர்த்தாரே அவன் மீட்பினை அடைந்து மகிழ்வுடன் துதி