என் நெஞ்சமே அஞ்சிடாதே
en nenjamae anjidaadhae
என் நெஞ்சமே அஞ்சிடாதே தஞ்சம் உன் ஆண்டவர் இயேசுவைப் பார்
ஞானம் இல்லையே என தயங்கிடாதே ஞானத்தின் உறைவிடம் உனக்கு உண்டு ஐசுவரிய சம்பன்னர் இராஜாதி இராஜா பூரணமாய் உன்னை நிறைத்திடுவார்
வியாதியை கண்டு சோர்ந்திடாதே விடுவிக்கும் தேவன் உனக்கு உண்டு பரிகாரி இயேசு பரிகரிப்பாரே பாரினில் அவரையே நம்பிடுவாய்
கடன் தொல்லை என்று கலங்கிடாதே காத்திடும் கர்த்தர் உனக்கு உண்டு வறுமையில் வாடும் மாந்தரை மீட்க வானபரன் அவர் வந்திட்டாரே
பசி என்று ஏங்கி தவித்திடாதே போஷிக்கும் பரமன் உனக்கு உண்டு ஆகாய பட்சியை போஷிக்கும் தேவன் உன்னையும் போஷிக்க வல்லவரே
சூனிய மந்திரம் நம்பிடாதே நீதியின் சூரியன் உனக்கு உண்டு நாசியின் சுவாசத்தால் அவனை அழித்து நானிலத்தில் நிலை நிறுத்திடுவார்