என் நெஞ்ச வீணையில் எத்தனை ராகங்கள்
en nenja veenaiyil ethanai raagangal
என் நெஞ்ச வீணையில் எத்தனை ராகங்கள் ஏற்றமிகு உன் படைப்பிலே அர்ச்சனைப் பூவாய் ஈசன் உம்மில் அர்ப்பணமாக நானும் வந்தேன் - 2
நான் காணும் உயிர்கள் எல்லாம் நாளெல்லாம் அவரினிலே நான் தேடும் அமைதி எல்லாம் நாதன் அவர் பெயரினிலே எந்தன் தேவனோடு தான் என்றும் நானும் வாழத்தான் அர்ச்சனைப் பூவாய் . . . 2
எனைத் தெரிந்தாய் கருவினிலே அணைத்துக் கொண்டாய் அன்பினிலே தனை அறிய தரணி எல்லாம் தன் கரத்தில் தாங்கிக் கொண்டாய் எந்தன் தேவனோடுதான் என்றும் நானும் வாழத்தான் அர்ச்சனைப் பூவாய் .