என் மேலுள்ள உம் சர்வ
en melulla um sarva
1. என் மேலுள்ள உம் சர்வ நன்மைகட்காக நான் -2 என்ன செய்வேன் உமக்கென் ஏசுபரா -இப்போ
2. நன்றியால் எந்தன் உள்ளம் பொங்கி வழியுதே- 2 இன்று வரையுமென்னைக் காத்ததாலே -தேவா
3. பாவத்தினின்று எந்தன் ஆவி உயிர்ப்பிக்க - 2 சாபசிக்ஷை சகித்த தேவசுதா -மகா
4. என்னை அனுதினம் அன்போடு நடத்திடும் - 2 பொன்னேசுவே அனந்தம் ஸ்தோத்திரமே - என்றும்
5. முற்று முடிய என்னைக் காத்து நடத்திட -2 சத்துவ மீந்திடும் நல் நண்பர் நீரே- திரு
6. தாதன் வலப்புறத்தில் நாதன் நீர் ஏழைக்காய் -2 பாதம் வேண்டியே நிற்கும் பாக்கியனே - பொன்னின்
7. குற்றம் குறைகளின்றி கோதில்லா ஜோதியில் - 2 முற்றும் எனை நிறுத்த வல்லவரே - தேவா
8. இந்நிலம் தன்னிலேழை தங்கிடும் நாளெல்லாம் -2 போற்றுவேனே உம் திரு நாமமதை -ஏழை