என் மணவாளனே உம் மணவாட்டி
en manavaalanae um manavaatti
இயேசுவே(3) என் மணவாளனே (3)
என் மணவாளனே உம் மணவாட்டி நான் உம்மை காணாமல் என் ஜெபம் முடிவதில்லை என் மணவாளனே இயேசு கிறிஸ்துவே உம்மை காணாமல் என் ஜெபம் முடிவதில்லை என் கனவிலும் நினைவினிலும் உம் வருகைக்காய் நான் ஏங்கி நிற்பேன் நீர் எந்தன் வாழ்வினில் வசந்தம் அன்றோ மனம் என்னும் சோலையில் மகிழ்திருப்பேன் (2) என் மணவாளனே உம் மணவாட்டி நான் உம்மை காணாமல் என் ஜெபம் முடிவதில்லை என் மணவாளனே இயேசு கிறிஸ்துவே உம்மை காணாமல் என் ஜெபம் முடிவதில்லை
நிலவே என்ன அழகா நீர்தானே அழகு நீர்தாமரை உம்மை கண்டதும் தலை குனியும் நானே . (2) நீதானா என் சொந்தம் நான்தானே மணவாட்டி தாங்காது என் நெஞ்சம் பிரிந்தாலும் உம்மை தேடும் நீரே வழி சத்யம் ஜீவனன்றோ நன்மையையும் கிருபையும் என்னை தொடரும் (2) (என் மணவாளனே )
அதிகாலை சூரியன் போல் உம் முகத்தை தேடுகிறேன் பனித்துளிகளில் உமது அழகினை நான் பார்க்கிறேன் (2) உம்முடன் நான் வாழ உம் கிருபை தாருமே காலங்கள் கடந்தாலும் நீர் மட்டும் போதுமே நீர் எந்தன் வாழ்வினில் வசந்தம் அன்றோ மனம் என்னும் கோவிலில் தெய்வம் அன்றோ (2) இயேசு எந்தன் வாழ்வினில் வசந்தம் அன்றோ மனம் என்னும் கோவிலில் மகிழ்ந்திருப்பேன் ( என் மணவாளனே )
என் மணவாளனே உம் மணவாட்டி நான் உம்மை காணாமல் என் ஜெபம் முடிவதில்லை என் மணவாளனே இயேசு கிறிஸ்துவே உம்மை காணாமல் என் ஜெபம் முடிவதில்லை என் கனவிலும் நினைவினிலும் உம் வருகைக்காய் நான் ஏங்கி நிற்பேன் நீர் எந்தன் வாழ்வினில் வசந்தம் அன்றோ மனம் என்னும் சோலையில் மகிழ்திருப்பேன் (2) (என் மணவாளனே)