என் மனசுல குடிகொண்ட
en manasula kudigonda
என் மனசுல குடிகொண்ட தெய்வமே உம்மை நான் ஆராதிப்பேன் - 2
நீர் நல்லவர், வல்லவர், போதுமானவர் - 2 உம்மை நான் ஆராதிப்பேன் - இயேசுவே - 2
(ஆராதனை (3) பிதாவே ஆராதனை, ஆராதனை (3) ஆவியே ஆராதனை)
ராஜாக்கள் எதிர்த்து நின்றாலும் உம்மை நான் ஆராதிப்பேன் - 2 நீர் ராஜாதி ராஜாவாய் இருப்பதினால் - 2 உம்மை நான் ஆராதிப்பேன் - இயேசுவே - 2
சிங்க கெபியில் என்னை போட்டாலும் உம்மை நான் ஆராதிப்பேன் - இயேசுவே - 2 நீர் யூதாவின் சிங்கமாய் இருப்பதினால் - 2 உம்மை நான் ஆராதிப்பேன் - இயேசுவே - 2
மரணம் என்னை சூழ்ந்து கொண்டாலும் உம்மை நான் ஆராதிப்பேன் - 2 நீர் ஜீவனாய் எனக்குள் இருப்பதினால் - 2 உம்மை நான் ஆராதிப்பேன் - இயேசுவே - 2