என் மனமே
en manamae
என் மனமே! கேள், உன் பரன் தானே வேதனையால் மாண்டாரே ஆ! ஆ! ஏன் இது ஏனோ ! ஓ! ஓ! எனக்காகத் தானே!
1. துரத்தினால் வரும் தொனியே பூங்காவினில் கேட்கிறதே என் நேசர் இயேசு தானே மிக வேண்டுதல் செய்கிறாரே - என்
2. நீங்கிடுமே இந்தப் பாத்திரம் நான் பருகுவதால் பாத்திரம் நான் சித்தமானதாலே நான் செய்வேன் என்றுரைத்தாரே - என்
3, தாகமானேன் நான் வெகுவாய் என் அலறினாள் அவர் பலமாய் உன் தேவன் தானே பாராய் இன்றைக்கே மனதுருகாய் - என்
4. உலகமும் எதிர்த்திடும் சமயம் எனை உற்றவர் மறந்திடும் தருணம் 'என் தந்தையே ஏன் மறந்தீர்' என அழுதாரே எம்பரனே - என்
5. மன்னிக்க வேண்டும் என் பரனே இவரறியாமற் செய்வது எனக்கே என உருக்கமாக தானே தேவ அன்பினால் கேட்டாரே - என்
6. யாவையும் தானடைந்தாலும் பரன் யாவையும் முடித்தேனென்றாரே மா பாவியான நானே யாவும் படைக்கிறேனவர் பாதமே - என்