என் கூடவே இரும்
en koodavae irum
என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது (2)
1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2) என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே
2.கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே
3.வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே சோதனை நேரத்தில் நண்பரானிரே (2) என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm F Bb C Dm Dm C Bb C Dm Dm F C Em G F Dm Dm G C F Dm Dm F C Em G F Dm Dm G C F Dm Dm F C Em G F Dm Dm G C F Dm