என் கர்த்தர் செய்த நன்மையாவும் எண்ணி
en karthar seydha nanmaiyaavum enni
என் கர்த்தர் செய்த நன்மையாவும் எண்ணி முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்தீரே முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான்
ஸ்தோத்தரிப்பேன் நான் முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் -2 எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் -2
1)தாழ்வில் என்னை கண்ணோக்கி பார்த்தீர் தயவாய் கரம்பிடித்து தூக்கினீர் -2 எட்டாத உயரத்திலே உட்கார வைத்தீரே முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் -2
2)என்னை என்றும் கைவிடாத நேசர் இயேசு நீர் தானே ஐயா -2 என்னை மறவாமல் என் நினைவாய் இருப்பவரே முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான்-2
3) என்னை என்றும் நல் மேய்ச்சல் நடத்தும் மேய்ப்பர் நீர்தானய்யா -2 நன்மை கிருபையென்றும் பின் தொடர செய்தீரே முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் -2