என் கன்மலை என் கோட்டையும்
en kanmalai en kottaiyum
என் கன்மலை என் கோட்டையும் என் துருகமும் நீரே நான்நம்பிடும் என் நம்பிக்கை என் அடைக்கலம் நீரே
போற்றுவேன் உம்மை வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன்ராஜா
1. அருமையானவர் நீரே நீரே இனிமையானவர் நீரே நீரே இன்பமானவர் நீரே நீரே மதுரமானவர் நீரே நீரே
2. சாரோனின் ரோஜா நீரே நீரே லீலி புஷ்பமும் நீரே நீரே ஆலோசனை கர்த்தர் நீரே நீரே சமாதானப் பிரபு நீரே
3. பூரண அழகின் தேவன் நீரே பதினாயிரங்களின் சிறந்தோர் நீரே ஆத்தும நேசர் நீரே நீரே என்னை நேசிக்கும் இயேசு நீரே