என் ஜீவனுள்ள நாளெல்லாம்
en jeevanulla naalellaam
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை கிருபையும் தொடர்ந்திடுமே - (2) நான் கர்த்தரின் வீட்டினிலே நெடு நாட்களாய் நிலைத்திருப்பேன் - (2)
The lord is my shepherd I shall not be in want
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்ப்பார் அமர்ந்த தண்ணீரண்டை கொண்டு சேர்ப்பார் என் ஆத்துமாவைத் தேற்றிடுவாரே நீதியின் பாதையில் நடத்திடுவார்
இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் தீங்குகள் என்னை வந்து சூழ்ந்தாலும் என்னோடு கூட இருக்கின்றாரே கரங்களினால் என்னை தேற்றிடுவார்
எதிரிகள் முன்பு என்னை உயர்த்திடுவார் எண்ணெயால் அபிஷேகம் செய்திடுவார் ஆவியினாலே நிரப்பிடுவாரே நன்மையும் கிருபையும் தொடர்ந்திடுமே