என் ஜீவனின் மா ராஜனே நான் உமதடிமை
en jeevanin maa raajanae naan umadhadimai
1. என் ஜீவனின் மா ராஜனே நான் உமதடிமை எனக்காய் நீர் அணிந்த முள்முடி மறவேன்.
கெத்செமனேயை மறவேன் உம் துயரத்தை மறவேன் உம் அன்பை என்றும் மறவேன் கல்வாரிக்கு நடத்தும்
2. எனக்காக நீர் சுமந்த சிலுவை மறவேன் அம்மரத்தில் நீர் அடைந்த பாடுகள் மறவேன்.
பல்லவி
கெத்செமனேயை மறவேன் உம் துயரத்தை மறவேன் உம் அன்பை என்றும் மறவேன் கல்வாரிக்கு நடத்தும
3. நீர் நித்திரை செய்தபோது தூதர் வந்து காவல் செய்த வெறும் கல்லறையை எனக்குக்காண்பியும்.
பல்லவி
கெத்செமனேயை மறவேன் உம் துயரத்தை மறவேன் உம் அன்பை என்றும் மறவேன் கல்வாரிக்கு நடத்தும
4. நாள்தோறும் என் சிலுவையை உமக்காய்ச் சுமப்பேன் பாதை துயரமாகிலும் நான் செல்வேன் உம்முடன்.
பல்லவி
கெத்செமனேயை மறவேன் உம் துயரத்தை மறவேன் உம் அன்பை என்றும் மறவேன் கல்வாரிக்கு நடத்தும