என் ஜீவனின் அதிபதி
en jeevanin adhibadhi
1. என் ஜீவனின் அதிபதி இயேசு என்னைத் தாங்கிடும் திருப்பதி இயேசு நான் நம்பிடும் என் கதி இயேசு அன்பின் நிதியம் இயேசு
போற்றிடுவேன் என் நேசரை போற்றிடுவேன் அன்பிதுவே அற்புதம் இயேசு
2. நான் பாவியாயிருக்கையில் இயேசு அன்பால் என்னை அணைத்தார் இயேசு வேன் துன்பங்கள் அணுகாமல் இயேசு என்றும் காத்தாரென்னை இயேசு
3. வன் கோட்டையும் அரணு மென் இயேசு விண் பாட்டையும் அளித்தவர் இயேசு தன் நாட்டிலும் சேர்ப்பவர் இயேசு என் ஆண்டவர் இயேசு
4. என் போக்கிலும் வரத்திலும் இயேசு தன் கரத்தில் மறைத்தவர் இயேசு தன் வரங்களைச் சொரிந்தவர் இயேசு என் தாபரமாம் இயேசு
5. மனுவாகவே வந்தவர் இயேசு மனப் பாரத்தைச் சுமந்தவர் இயேசு அனுதினமும் என்னண்டையில் இயேசு எனதாதரவாம் இயேசு
6. அதிகாலையில் எழும் பையில் இயேசு என்னை ஆவலாய் காப்பவர் இயேசு முழு நாளில் என்னுடன் இயேசு ஜெயமளிப்பவராம் இயேசு
7. நம் தேவாதி தேவன் இயேசு வெகு ஜோதியாயிருந்தவர் இயேசு அன்பால் புவி வந்தவர் இயேசு இன்னும் ஜீவனுள்ளோர் இயேசு
8. தேவ முன்னிலை நிற்பவர் இயேசு தேடும் யாவையும் ஈந்தவர் இயேசு தேசமெங்கும் என் அடைக்கலம் இயேசு தேவ சுந்தரனார் இயேசு
9. என் ஆத்துமா இன்பராம் இயேசு என்னைக் காத்து நடத்திடும் இயேசு பரலோகத்தில் காண்பதும் இயேசு எனக்கெல்லாமுமாம் இயேசு