என் ஜீவன் பிரியும் நாள்
en jeevan piriyum naal
என் ஜீவன் பிரியும் நாள் வரைக்கும் உம் கரங்களில் நான் இருக்க அர்ப்பணித்தேன் உம் கரத்தில் வணைந்திடும் உம் சித்தம் போல்
அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் அர்ப்பணித்தேன் என்னை முழுவதுமாய் உம் கரத்தில் என் இயேசு நாதா-2
1.உடைந்த பாத்திரம் நான் என்னை உருவாக்க அறிந்தவரே பயனில்லா பாத்திரம் நான் என்னை பயன்படுத்த தெரிந்தவரே-2 உருவம் இல்லாத களிமண்ணாய் வணைந்தீரே உம் கரத்தால் இதுவரை நடத்தினீர் உம் தயவால் இனியும் நடத்திடுமே-என் ஜீவன்
2.தாயின் கருவில் என்னை உருவாக்கி உமதாக்கினீர் தாயினும் மேலான அன்பை (உம்) மார்போடு அணைத்தளித்தீர்-2 உம்மைப்போல் வேறு தெய்வம் இல்லை நான் நம்பும் கன்மலையே என் காலங்களை உம் கரத்தில் தந்தேன் இனி நான் அல்ல எல்லாம் நீரே-என் ஜீவன்